Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 05:52 AM

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 17,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 276 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
தங்கம், வெள்ளி விலையில்...
தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என்று, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. போர் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தாக்கம், தங்கம், வெள்ளி மற்றும் பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.
மார்ச் 16 விலை
இன்று மார்ச் 16ஆம் தேதி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.276க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ பார் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,76,000க்கு விற்பனை ஆனது.
மார்ச்-11 தங்கம், வெள்ளி விலை
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-12 தங்கம், வெள்ளி நிலவரம்
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-13 தங்கம், வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச் 14 விலை சரிவு
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
11 மார்ச் - ரூ.1,20,960
12 மார்ச் - ரூ.1,19,760
13 மார்ச் - ரூ.1,19,200
14 மார்ச் - ரூ.1,18,080
16 மார்ச் - ரூ.1,17,680 இன்று காலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved