தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 5 ஆம் தேதி வரை கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் திடீரென தற்போது இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, மீனம்மநல்லூர், வாழக்கரை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், திட்ச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.