மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், சம்பள நிலுவையை கேட்டு இரண்டாவது நாளாக சாலைமறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பேச்சு வார்த்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.