news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

திருவள்ளூர் - திருத்தணி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி : 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று லேசான மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சூறைக்காற்று வீசி மின் கம்பம் துண்டாக உடைந்து.

மின்தடை ஏற்பட்டு சுமார் 24 மணி நேரமாக மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் சூரிய நகரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு செல்லும் மின் கம்பத்தை மட்டும் மின் ஊழியர்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு மின் வழங்கப்பட்டதாகவும் பாப்பிரெட்டிப்பள்ளியில் மட்டும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை,

மின்சாரம் வழங்க மின் ஒயர் மற்றும் டிராக்டர் ஆழம் தோண்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இளநிலைப் பொறியாளர் ஷர்மிளா பொதுமக்களிடம் கேட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இளநிலை பொறியாளர் ஷர்மிளாவிடம் பாப்பிரெட்டி பள்ளியில் மின் கம்பம் உடைந்து 24 மணி நேரமாக மின்சாரம் வழங்காமல் உள்ளது.

ஆனால் கல்குவாரிக்கு மட்டும் உடனடியாக எப்படி மின்சார வழங்கப்பட்டது என்று நியூஸ் தமிழ் செய்தியாளர் கேட்டதற்கு கல்குவாரியில் இருந்து அதிகளவில் அழுத்தம் கொடுத்ததால்
வேற வழி இன்றி உடனடியாக மின் ஊழியர்களை அனுப்பி சரி செய்து மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை இல்லை

பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் தடை - கருப்பு ஆடுகள் காரணமா?

2
43 mins agoshare
CTR Nirmal kumarbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved