news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்
tv

Also Watch

tv

Read this

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

கரப்பான் பூச்சி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cockroach janta party

மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம் :

இந்தியாவின் வேலையில்லா இளைஞர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள பக்கம் முடக்கப் பட்டதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி கட்சியின் அசுர வளர்ச்சி தம்மை வியப்படைய செய்ததாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, இளைஞர்களை கை கொள்ள முயல வேண்டும் என வலியுறுத்தினார்.

எக்ஸ் பக்கத்தை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் கரப்பான் ஆதிக்கம் :

இந்தியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, எக்ஸ் தளத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.

எக்ஸ் தளத்தில் அந்த கட்சியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தேசிய கட்சிகளை அதிருப்தி அடைய செய்திருந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் 2 கோடி பேர் அக்கட்சியின் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் சேர்ந்து செயல்பாடு :

இந்தியாவிற்கு எதிரான சக்திகளுக்காகச் செயல்பட்டு வந்த முசாபர்பூரைச் சேர்ந்த முகமது முஸ்தபாவை, பீகார் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும், பிரபல ஆயுதக் கடத்தல்காரரான ஷாசாத் பட்டி மற்றும் அவனது கூட்டாளிகளுடன் முகமது முஸ்தபா நேரடித் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா - சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து :

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடுலிடீஸ் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற விரிவான பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொழுத்தாகின. அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை :

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவ தயாா்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Link
யானைகள் மோதலில் தமிழக பெண் உயிரிழந்த விவகாரம்

யானைகள் மோதலில் தமிழக பெண் உயிரிழந்த விவகாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

4
1 hr 20 mins agoshare
SRH 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved