news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6 ஆயிரம் ரன்கள்
tv

Also Watch

tv

Read this

டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6 ஆயிரம் ரன்கள்

சுப்மன் கில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுப்மன் கில்

மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற சுப்மன் கில் :

டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் கே.எல் ராகுல்166 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்து முதல் இடத்திலும், விராட் கோலி 184 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், சுப்மன் கில் 185 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களை கடந்துள்ளார்.

யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் :

Geneva Open டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் பேட்ரிக் ரிக்-ஆடம் பவ்லாசெக் ஜோடியை எதிர்கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 7க்கு 5, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றது.

பெங்களுரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி:

ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் பெங்களுரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதரபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஹைதரபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசசஸ் ஹைதரபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்த நிலையில்.

அடுத்து விளையாடிய பெங்களுரு அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா பஞ்சாப் அணி..?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் சுற்றின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் செல்லுமா என ரசிகர்கள் எதர்பார்ப்பில் உள்ளனர்.

Related Link
சிஎஸ்கேவின் பிளே ஆஃப் சுற்று கனவு தகர்ந்தது

சிஎஸ்கேவின் பிளே ஆஃப் சுற்று கனவு தகர்ந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

2
22 mins agoshare
SRH 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved