Also Watch
Read this
By: Manigandan Raja

25 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்த வழக்கு :
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கு சட்டவிரோதமாக குடியேறி வேலை பார்த்து வருகிறார்கள் இது தொடர்பாக போலீசார் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்தாண்டு, ஜூன் மாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக
பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் அங்கு சென்று விசாரணை நடத்திய போது.

முறையான ஆவணங்கள் ஏதுமின்றி 25 வங்கதேச நாட்டினர் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இவர்களிடம் வங்கதேச நாட்டினரின் அடையாள அட்டை இருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆனது திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக குடியேறிய 25 பேருக்கும் தலா இரண்டு ஆண்டு
சிறை தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved