Also Watch
Read this
By: Manigandan Raja

RCB-க்கு கனத்த பின்னடைவு!
2026 ஐபிஎல் தொடரில் Sunrisers Hyderabad அணி, Royal Challengers Bengaluru அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடியான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற Sunrisers Hyderabad முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி விளையாடிய அவர்கள் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து மாபெரும் இலக்கை நிர்ணயித்தனர். அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய Ishan Kishan 46 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

அவருக்கு துணையாக Abhishek Sharma 56 ரன்களும், Heinrich Klaasen 51 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரைக் கூர்மையாக்கினர். இதனை தொடர்ந்து 256 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய Royal Challengers Bengaluru அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Rajat Patidar 56 ரன்களும், Venkatesh Iyer 44 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதும் தாக்கம் செலுத்த முடியவில்லை. முடிவில், RCB அணி 20 ஓவர்களில் 200/4 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
Pat Cummins தலைமையிலான ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் விளையாடி RCB அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வெற்றியால் Sunrisers Hyderabad அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை நிலையை வலுப்படுத்த, Royal Challengers Bengaluru அணிக்கு இது ஒரு சிரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved