news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி

புளியமங்கலம், ராணிப்பேட்டை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அடிக்கடி மின்தடை

மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி : 

புளியமங்கலத்தில் நீடிக்கும் மின்தடை கடும் அவதி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் அடுக்கடுக்க குற்றச்சாட்டுகள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியில் நீண்ட நேரமாக ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு முறையும் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து நீடித்த மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம், வீட்டு உபயோகப் பணிகள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய உயர் மட்ட அதிகாரிகள் மின் கோளாறு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் அதில், “இக்கட்டான சூழ்நிலையில் மின்வாரிய அலுவலர்களுக்கு தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லை.

உரிய பதிலும் அளிப்பதில்லை” என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மின்விநியோகத்தை சீராக வழங்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Link
24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

4
1 hr 20 mins agoshare
SRH 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved