செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். வில்லிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் 18 வயது மகள் மரக்காணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. மகளை காணவில்லை என அவரது பெற்றோர் சூனாம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் மதுராந்தகம் -வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.