Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 11:13 AM
By: Fyrose Banu

பானிபூரி வியாபாரி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1.50 லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பானிபூரி வியாபாரியிடம் சோதனை
இந்த நிலையில் பெருமைப்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (45) இவர் திருச்சியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது நகைகளை திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக திருச்சியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பத்தூருக்கு வந்தார்.
ரூ.1.5 லட்சம், 21 கிராம் தங்கம் பறிமுதல்
அப்போது காரப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த பறக்கும் படையினர் லட்சுமணன் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்த அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியர் வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்பு அதிகாரிகள் அந்த பணத்தை கருவூலத்திலும் ஒப்படைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved