news-tamil-logo

3/18/2026, 2:52:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எட்டாக்கனியான ஓய்வூதிய பலன்கள்?
tv

Also Watch

tv

Read this

எட்டாக்கனியான ஓய்வூதிய பலன்கள்?

காலில் விழுந்து கதறிய இளைஞர்

Posted on: Feb 06, 2026 08:56 AM

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், தந்தை இறந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவரது ஓய்வூதிய பண பலன்கள் கிடைக்காததால், நோய் வாய்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பரிதவிப்பதாக கூறி, சுகாதார ஆய்வாளரின் காலில் விழுந்து கதறிய இளைஞரால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓர் ஆண்டுக்கு மேலாகியும்...
தந்தை உயிரிழந்து 2 ஆண்டுகள் ஆகியும், ஓய்வூதியப் பணப் பலன்கள் கிடைக்காத விரக்தியில் மனக்குமுறலை கொட்டித்தீர்த்த மகனின் வேதனையின் வெளிப்பாடு தான் இது. கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கான சேமநல நிதி, ஈட்டிய விடுப்பு மற்றும் ஈட்டா விடுப்பு உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு
பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, மக்கள் உரிமை இயக்கம் தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் சுடலைமணி தலைமையில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

காலில் விழுந்து மன்றாடினார்
தூய்மைப் பணியாளர் ஒருவரின் மகனான சரவணன் என்பவர், தமது தந்தை உயிரிழந்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை என்றும், நோய் வாய்ப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறி, சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு காலில் விழுந்து மன்றாடினார்.

எல்லாருக்கும் நீதி
ஓய்வூதிய பணப்பலன்கள் விரைவில் கிடைக்கவில்லை என்றால், தாமும், தாயும் தீக்குளித்து கொள்வோம் எனவும் சரவணன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமக்கு மட்டுமல்ல, இங்கு வந்துள்ள எல்லாருக்கும் நீதி கிடைக்க வேண்டுமென துக்கத்திலும் சரவணன் சமதர்மம் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏழையின் சொல் அம்பலம் ஏறாது
நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சரவணன், ஓய்வூதிய பணப்பலன்களை பெற்றுத் தருவதாக கூறி, போராட்டத்திற்கு அழைத்து வந்த சுடலைமணி, 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டதாக பகீர் குற்றச்சாட்டை கிளப்பினார். அப்போது சரவணனை கடந்து சென்ற சுடலைமணி, அவர் மதுபோதையில் உளறுவதாக கூறினார். ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Related Link
ஒரே கட்டடம், இரு முறை திறப்பு

ஒரே கட்டடம், இரு முறை திறப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved