திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகை ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஆவடி மாநகர மேயருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஏரியின் 2 மதகுகளில் ஒன்றை மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக மூடி, ஒரு மதகு வழியாக உபரி நீரை வடிய செய்ய அறிவுறுத்திய ஆட்சியர், நிரந்தர தீர்வாக அடுத்த பருவமழைக்குள் உபரிநீர் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் வகையில் வடிகால்வாய் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மழைக்காலங்களில் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் நியூஸ் தமிழில் செய்தி வெளியானது.