சபரிமலை சீசன் தொடங்குவதை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் செவ்வாழை அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவு என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக செவ்வாழைத்தார்கள் பாதிப்படைந்ததாகவும், அறுவடை செய்வதற்கு உரம், மருந்து, கூலியாள் சம்பளம் போக தங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.