மூட நம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணுவை திருப்பூரிலிருந்து மீண்டும் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாழனன்று திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், அங்கு 3 hard disk மற்றும் ஒரு பென் டிரைவை பறிமுதல் செய்தனர். மகாவிஷ்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான 8 வங்கி கணக்குகளையும், அவரது வீடியோக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.