ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருக்கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களிலும், திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாக்களில் பங்கேற்பதற்கு வந்த உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களால் திருப்பரங்குன்றமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது.