news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அண்ணன் - தம்பி இடையே நிலத்தகராறு
tv

Also Watch

tv

Read this

அண்ணன் - தம்பி இடையே நிலத்தகராறு

காட்டுகொட்டாய், கள்ளக்குறிச்சி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிலத்தகராறு

நிலத்தகராறு : 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புது பாலப்பட்டு காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ். இவரது கணவர் கார்த்தி சொந்தமாக நிலம் வாங்கி கிரயம் செய்துள்ளார்
அந்த இடத்தில் அவரது அண்ணன் அன்பரசு பங்கு கேட்டு நீண்டநாளாக பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அன்பரசு மற்றும் ராஜாமணி ஆகிய இருவரும் சேர்ந்து செந்தமிழ் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு நடைபெறும் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகிறது என தெரிய வந்ததும், அன்பரசு சிசிடிவி கேமராவை உடைக்கும் காட்சியும் அதே கேமராவில் பதிவாகியுள்ளது இதுகுறித்து செந்தமிழ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய அன்பரசு மற்றும் ராஜாமணி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற
காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Link
சுட்டெரித்து வரும் வெயில் - அருவியில் குவிந்த மக்கள்

சுட்டெரித்து வரும் வெயில் - அருவியில் குவிந்த மக்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
10 hrs 46 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved