news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடைகளை சாலையோரங்களில் அமைத்துள்ளதாக குமுறல்
tv

Also Watch

tv

Read this

கடைகளை சாலையோரங்களில் அமைத்துள்ளதாக குமுறல்

சோலைஹால், திண்டுக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீன் மார்க்கெட்

சாலையோரங்களில் அமைத்துள்ளதாக குமுறல் : 

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் மீன்கள் வரத்து கடுமையாக குறைந்துள்ளது. விசைப்படகுகளில் மீன் பிடிக்காமல் கரைவலை மூலம் மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் மாநகராட்சி மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அது அகற்றப்பட்டு புதிய கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்த பணிகள் தாமதமாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் மீன் வியாபாரிகள்.

தற்போது சாலையோரங்களிலும் மாநகராட்சி ஆடுவதைக் கூடத்திலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் கடைகள் இல்லாமல் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறும்

மீன் வியாபாரிகள் மாநகராட்சி மீன் மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஐஸ் விலை உயர்வு ஆகியவற்றால் மீன் விலை அதிகரித்து இருப்பதாக கூறும் வியாபாரிகள், பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே மீன்கள் விலை குறையும் என்கின்றனர்.

Related Link
மாநகர பேருந்தில் போதை ஆசாமிகள் தகராறு

மாநகர பேருந்தில் போதை ஆசாமிகள் தகராறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
14 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved