Also Watch
Read this
By: Manigandan Raja

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் :
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி 150 ஆண்டுகள் பழமையானது கல்லூரியில் இதில் 4000 த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இக்கல்லூரியில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு திடலில் தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பில் புதிதாக மினி ஸ்டேடியம் கட்ட திட்டமிட்டுள்ளது. பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, அரசு கல்லூரியில் கட்ட திட்டமிட்டுள்ளதால்.
எதிர்காலத்தில் இந்த இடம் விளையாட்டு துறைக்கு சொந்தமானதாக மாறிவிடும் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே மினி ஸ்டேடியத்தை கல்லூரி வளாகத்தில் கட்டுவதை தமிழக அரசு கைவிடக் கோரி இக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved