தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்படும் மலர்களை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை தற்போது 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பிச்சிப்பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.