news-tamil-logo

3/19/2026, 10:28:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இன்னும் இப்படியே இருக்கு...
tv

Also Watch

tv

Read this

இன்னும் இப்படியே இருக்கு...

மதுரை

Posted on: Mar 17, 2026 10:15 AM

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu(13)

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் மேலூர் அருகே நான்குவழிச்சாலை மேம்பாலத்தில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பின்பற்றாத தேர்தல் விதிமுறைகள்
மேலூர் அருகே அய்யாபட்டி மற்றும் கருங்காலக்குடி நான்குவழிச் சாலை மேம்பாலங்களில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னரும் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படாமல் காணப்படுகின்றன. பொது சொத்துகளில் எந்தவித அரசியல் விளம்பரங்களும் இருக்கக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இருந்தும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குறிப்பாக மக்கள் அதிக பயன்படுத்தும் மேம்பாலத்தில் இவ்வாறான விளம்பரங்கள் நீடிப்பது தேர்தல் அதிகாரிகள் அலட்சியத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கேள்விக்குறியாகி உள்ள தேர்தல் விதிமுறைகள்
மேலூர் வட்டாரத்தில் மேலூர், தும்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான கருங்காலக்குடி, அய்யாபட்டி பகுதியில் இன்னும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாதது தேர்தல் விதிமுறைகளை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
17 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved