news-tamil-logo

3/22/2026, 12:21:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 18 வயது முடிந்து 4 நாட்களே ஆச்சு, விபரீதம்
tv

Also Watch

tv

Read this

18 வயது முடிந்து 4 நாட்களே ஆச்சு, விபரீதம்

நெல்லை

Posted on: Feb 03, 2026 06:00 AM

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில் பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்யவிருந்த 19 வயது பெண் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆணவ கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெண்ணின் கழுத்தில் காயம் இருக்கும் நிலையில், அவரது தாய்மாமா தான் அடித்து கொலை செய்துவிட்டதாக காதலன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ரகசியம் காத்து வளர்த்து வந்த காதல்
நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியை சேர்ந்த பட்சி ராஜன் என்பவரின் இரண்டாவது மகள் சிவமதி. இவர் அரசு உதவி பெறும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஆனந்த் கிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக ரகசியம் காத்து வளர்த்து வந்த காதல் சிவமதியின் வீட்டுக்கு தெரிய வரவே, அவரது செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு பெற்றோரும், தாய்மாமாவும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அந்த இளைஞர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்றதாலும், பொருளாதாரத்தில் பின் தங்கியதை காரணம் காட்டியும் சிவமதி வீட்டார் கடும் எதிர்ப்பை தெரிவித்து சிவமதிக்கு புத்திமதி கூறி வந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண ஏற்பாடுகள்
பெற்றோர் கூறியதை கேட்காத சிவமதி அவ்வப்போது ஆனந்த் கிருஷ்ணனை பார்ப்பதும், பேசுவதுமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையறிந்த சிவமதியின் பெற்றோர் மேலும் கண்டிப்புடன் இருக்கவே, திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர். அப்போது அவருக்கு 18 வயதே பூர்த்தியடையாத பட்சத்தில் காத்திருந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தான் சிவமதி 18 வயதை கடந்திருக்கிறார். இவர்களது காதலுக்கு இளைஞரின் வீட்டார் சம்மதம் தெரிவித்து, பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமண ஏற்பாட்டை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெறவிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிவமதியை அழைத்து சென்ற ஆனந்த் கிருஷ்ணன் திருமணத்துக்காக பட்டு புடைவையை வாங்கி வந்த நிலையில் திருமண அழைப்பிதழையும் அச்சிட்டு உற்றார் உறவினர்களுக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

காதலனுடன் செல்போன் பேச்சு
சம்பவத்தன்று, பெற்றோர் வெளியே சென்றதை பயன்படுத்தி தனது பாட்டியின் செல்போன் மூலம் காதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்த அவரது தாய்மாமா பழனி, சிவமதியை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் மதியம் 12 மணியளவில் நடக்கவே சுமார் ஒரு மணிநேரமாக இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது பழனி பேசுவதையெல்லாம் செல்போன் லைனில் இருந்து கொண்டு ஆனந்த் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

சிவமதி உயிரிழந்து விட்டதாக வந்த செய்தி
பிற்பகல் 3 மணியளவில் மொட்டை மாடிக்கு அழுது கொண்டே சென்ற சிவமதி, அங்கிருந்து ஆனந்த் கிருஷ்ணனை பார்த்து கையசைத்ததாக சொல்லப்படும் நிலையில், மாலை 6 மணியளவில் கீழே விழுந்து சிவமதி உயிரிழந்து விட்டதாக வந்த செய்தி, காதலன் தலையில் இடியை இறக்கியுள்ளது. கழுத்தில் காயம் இருப்பதாக கூறப்படும் நிலையில், வேறு சமூக இளைஞரை திருமணம் செய்ய முயன்றதற்காக ஆவண படுகொலை செய்யப்பட்டாரா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசார் விளக்கம்
இளம்பெண் சிவமதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக அவரது காதலன் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளம்பெண் மரண வழக்கை, தற்கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை ஆணையாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Link
MLA பழனியாண்டியின் கொடூர முகம்

MLA பழனியாண்டியின் கொடூர முகம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
22 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved