ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாலம் அமைத்தும் சாலையை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். துத்தாகுடியில் இருந்து குருந்தங்குடி சென்று தேவகோட்டை வட்டானம் சாலையை இணைக்கும் பிரிவு சாலையில் இருந்த தரைப்பாலம் அகற்றப்பட்டு புதிதாக பாலம் கட்டப்பட்ட நிலையில், சாலையை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.