Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 08:04 AM
By: Fyrose Banu

திருச்செந்தூர் அருகிலுள்ள மேலத்திருச்செந்தூர் பகுதியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் வீணடிக்கப்பட்ட அம்மா பூங்கா உடல் பயிச்சிக்கூடம். பராமரிப்பில்லாததால் சமூக விரோதிகளின்கூடாரமாக இருந்துவருவதாக அப்பகுதி இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா உடற்பயிற்சிக்கூடம்
மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கட்டிடம்
ஆனால் 10 ஆண்டுகளாகியும் அம்மா பூங்கா உடற்பயிற்சிக்கூடம் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் பூங்கா உரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலும் இன்று பூங்கா மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த நவீன உபகரணங்கள் சேதமடைந்ததுடன் பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சமூக விரோதிகளின் கூடாராக மாறிய அவலம்
மேலும் பூங்கா வளாகத்திலும் உடற்பயிற்சி கூடத்திலும் சமூக விரோதிகள் தாராளமாக அமர்ந்து மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கா முழுவதும் மது பாட்டில்களாகவே காணப்படுகிறது. இதனால் அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அது முழுவதுமாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் இதுகுறித்து பல முறை மேலத்திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் புகார் அப்பகுதியினர் புகார் தெரித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் இதனால் தங்கள் பகுதி இளைஞர்கள் மதுபோதை உள்ளிட்ட தீய செயல்களுக்கு ஆளாகி வருவதாகவும், தங்கள் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்ட போதிலும் அது திறந்துவைக்கப்படாததாலும் உரிய பராமரிப்பு இல்லாததாலும் இளைஞர்கள் தாங்களாகவே சொந்த முயற்சியில் உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி வீதிகளில் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்துவருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப்பகுதி மக்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved