திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்ட உயர் மின்விளக்கு கோபுரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொசவன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாத அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக இரு உயர் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. பல மாதங்களைக் கடந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டாததால், இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷப்பூச்சிகள் மற்றும் திருட்டு பயம் காரணமாக பொதுமக்கள் நடமாட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்மின் விளக்குகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.