புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலி மதுபானங்கள் தயாரிப்பது மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் இடங்கள் எவை என்பதை கண்டறிந்த போலீசார், சாவித்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படகுமூலம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.