தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் அதிகமாக வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.