தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்காசி மற்றும் கோவில்பட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக, கோவில்பட்டிக்கு வருகை தந்தார். கோவில்பட்டி நகரில், இளையரசனேந்தல் சாலையில், கலைஞர் அறிவகம் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அலுவலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புதிய கட்சி அலுவலகத்தையும் அலுவலகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலை மார்க்கமாக, புறப்பட்டு சென்றார்.இதையும் பாருங்கள்... Chief Minister unveils the full statue of Kalaignar installed in Kovilpatti