காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக பிரமுகர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். வெளிநாட்டை சேர்ந்த ஏற்றுமதி தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி தேவியின் கணவரும், ஒன்றிய திமுக நிர்வாகியுமான வேலு, ஊராட்சி உறுப்பினர் ராகுல் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு மின்னஞ்சல் மூலம் புகார் செய்தனர்.இதையும் படியுங்கள் : காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை... சர்வதீர்த்தக் குளத்தில் இருந்து இளைஞரின் உடல் மீட்பு