காஞ்சிபுரத்தில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயார்குளத்தை சேர்ந்த அன்வர்கான், காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்களும், நண்பர்களும் தேடியபோது, சர்வதீர்த்தக் குளத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.