ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் குருபூஜையையொட்டி வரவழைக்கப்பட்ட போலீசார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 82 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் குருபூஜை நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான மக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு பணிக்காக பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் 82 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டார்.