விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பேயன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், வாழைகுளம் கண்மாயும் நிரம்பி வருகிறது.