திருவள்ளூர் அருகே ஹார்டுவேர் கடையில் பணிபுரிந்த இளைஞர், மேற்கூரையை பிரிக்கும் போது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமைந்துள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடையில், செல்வராயன் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார். சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள வீடுகள், கடைகள் அகற்றப்பட்டு வருவதால், பாஸ்கரும் கடையை அகற்றும் பணியில் இறங்கியுள்ளார். கடை ஊழியர் செல்வராயன் மேற்கூரையில் ஏறி இரும்பு ஷீட்டுகளை அகற்றிய போது, மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.