Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எருமனூர் ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக வருவாய்த் துறையினரால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடங்களுக்கு மின்சார வசதி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தராத அதிகாரிகள்,
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டாக்களை வழங்கி, அதனை அளவீடு செய்ய வருகை தந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved