விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெயிண்டிங் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலகண்டமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார், வெள்ளக்கோட்டை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அவரது நண்பர்களும் உடன் தங்கி இருந்ததாகவும், மது போதையில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தங்கி இருந்த வீட்டில் முத்துக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.