கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை வெள்ளாற்றங்கரையிலும் சுடுகாட்டுக்கு செல்லும் வழியிலும் கொட்டி வருவதால் அப்பகுதி முழுவதுமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது குப்பைகள் மீது ஏறி செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.