Also Watch
Read this
By: Manigandan Raja

மோசடி :
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் அஜித் குமார் (27). பட்டதாரியான இவர் அரசு வேலை பெற பல்வேறு தேர்வுகள் எழுதி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்
அவரது தந்தையின் நண்பர் ஒருவர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த சரோஜினி(28) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ லட்சுமி(48)
ஆகியோர் பழக்கம் ஆகியுள்ளனர்.
இதில் சரோஜினி என்ற பெண் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் அரசு துறையில் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும் அஜித் குமார் மட்டுமே எனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சரோஜினி மூலம் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்த நிலையில் அஜித்குமாரின் குடும்பத்தினர் சரோஜினியின் ஆசை வார்த்தையை
நம்பி அரசு வேலைக்காக ரூபாய் 8 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர்.
சிறிது நாட்களில் சுகாதாரத் துறையில் பணி நியமனத்திற்கான ஆணை அதற்கான அடையாள அட்டை அதில் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருப்பதை அறிந்த அஜித்குமார் குடும்பத்தினர்
சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதை உணர்ந்தனர்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் அளித்த புகாரி அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மோசடி சம்பவம் உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவர் மீதும் மோசடி அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இடைத்தரசர்களை நம்பி ஏமாற வேண்டாம் உரிய போட்டி தேர்வுகள் மூலமாகவே தேர்வுகளை எழுத வேண்டும் என காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் சேர்ந்து அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து அரசு வேலைவாய்ப்புருவதாக இளைஞர் இடம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved