news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிகழ்வுகள்
tv

Also Watch

tv

Read this

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிகழ்வுகள்

Iran Isreal war

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்  மற்றும் இஸ்ரேல் போர் நிகழ்வுகள்

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பேச்சுவார்த்தையைப் பாதிக்காது : 

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன எப்-15 ரக போர் விமானம் ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 2 விமானிகளில் ஒருவரை மீட்ட அமெரிக்க ராணுவம் மற்றொரு விமானியை தேடும் பணியில் உள்ளது.

இதேபோல் இரண்டாவது அமெரிக்க போர் விமானம் தெளிவற்ற சூழ்நிலைகளில் விபத்துக்குள்ளானதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் இந்தச் சம்பவங்கள் ஈரானுடனான பேச்சு வார்த்தைகளைப் பாதிக்காது என்ற டிரம்ப் போர் குறித்த கவலைகளையும் நிராகரித்தார்.

ஈரானின் வடக்கு அல்போர்ஸுல் தாக்கி அழிக்கப்பட்ட பாலம் :

ஈரானின் வடக்கு அல்போர்ஸ் மாகாணாத்தில் உள்ள பாலம் மீது நடந்த அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தெஹ்ரானையும், ஈரானின் நான்காவது பெரிய நகரமான கராஜையும் இணைக்கும் முக்கிய பாலம் கடந்த 2ஆம் தேதி தாக்கப்பட்டது.

ராணுவ போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பாலம் பதுங்கு குழிகளை தகர்க்கும் சக்தி வாய்ந்த குண்டுகளால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் முழுவதும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக மின் உற்பத்தி நிலையங்கள் குறி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் :

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன் மொழிவை ஈரான் நிராகரித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

குவைத் தீவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் ஈரான், முழுமையான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, அமெரிக்காவின் தற்காலிக போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டது.

இந் நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-15 ரக போர் விமானம் ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

அமெரிக்க போர் விமானியை பிடித்தால் விலை உயர்ந்த பரிசு :

அமெரிக்க போர் விமானத்தில் இருந்து குதித்த விமானியை பிடித்தால் விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன எப்-15 ரக போர் விமானம் ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அதில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் தரையிறங்கியுள்ளனர்.

அதில் ஒரு விமானி ஈரானில் குதித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த விமானியை உயிருடன் பிடித்து போலீசில் ஒப்படைப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
இன்றைய  உலக நிகழ்வுகள்

இன்றைய உலக நிகழ்வுகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
5 hrs 52 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved