news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியில்லை - திருமாவளவன் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியில்லை - திருமாவளவன் அறிவிப்பு

யுத்தத்தில் பின் வாங்குவதும் ராஜ தந்திரம் தான்

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சட்டசபைக்கு போக விரும்பினேன்
இதுதொடர்பாக, சென்னையில் திருமாவளவன் கூறியதாவது;
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. இருந்தாலும், நான் சட்டப் பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். நான் சட்டப்பேரவையில் விளிம்பு நிலை மக்களின் அரசியலைப் பேச வேண்டும் என்று, இன்றைக்கு அல்ல, கடந்த 25 ஆண்டுகளாக எண்ணி, இங்கு வந்திருக்கிறேன்.

ஒன்பது பேர் எதிரிகள்

2001ல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன். பதவி மீது எனக்கு ஆசையில்லை. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. நான் திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன். ஒருவருக்கு சீட் கொடுத்தால், ஒன்பது பேர் எனக்கு எதிரியாக மாறுகின்றனர். ஏன் வாய்ப்பு தரவில்லை? என்று ஷாநவாஸுக்கு விளக்கியிருக்கிறேன். என் முடிவை பாலாஜியும், நவாஸும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.


யுத்தத்தில் பின்வாங்குவதும் ராஜ தந்திரம் தான்

தொங்கு சட்டப்பேரவை அமையும். அதனால், ஆசைப்பட்டு கூட்டணி ஆட்சி என்று திருமாவளவன் வதந்தியைப் பரப்பினார் என்றும், திருமாவளவன் துணை முதல்வர் என்றும் பலர் தங்களது கருத்துக்களைப் பரப்பினர். என்னை யாரும் இயக்க முடியாது. பதவிக்கான நான் யார் பின்னாடியும் செல்லவில்லை. யுத்தத்தில் பின் வாங்குவதும் ராஜ தந்திரம்தான்.

இதுவரை தனிச்சின்னத்தில் தான்...
2006ஆம் ஆண்டில் 9 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டபோதும், தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதில், இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர், இன்று வரை எங்களுடைய தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.


Related Link
தமிழக பாஜக என்னை பரிந்துரைக்கவில்லை - அண்ணாமலை

தமிழக பாஜக என்னை பரிந்துரைக்கவில்லை - அண்ணாமலை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு

1
2 hrs 56 mins agoshare
பெரம்பலூர் தேர்தல் ஆணையம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved