Also Watch
Read this
By: Manigandan Raja

பேரம் பேசியதன் வீடியோ வெளியானது :
கேஸ் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வணிகப் பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர் ஒன்று சுமார் 5500 ரூபாய் வரையிலும் அதே போல் வீட்டு
உபயோக கேஸ் சிலிண்டர் 2500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக கேஸ் சிலிண்டர் கூடுதல் விலைக்கு பேரம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கவரப்பேட்டையில் உள்ள கேஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் ஏஜென்சிக்கு அருகாமையில் உள்ள ஹோட்டலில் அமர்ந்து கூட்டாக சாப்பிடும் போது செல்போனில் ஒரே நபர் 8 சிலிண்டர் எடுத்து சென்று விட்டதாகவும்.
ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரை ரூபாய் 5500 வரை விற்கப்படுவதாகவும் யாரேனும் இருந்தால் உடனடியாக வந்து வாங்கி செல்லுமாறும் பேரம் பேசுகின்றனர்.
அதேபோல் புதுகுமுடிபூண்டி பகுதியில் ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் கைமாறும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களாக கேஸ் தட்டுப்பாட்டால் உணவு சமைப்பதற்கு கூட வழிவகை இல்லாமல் இல்லத்தரசிகளும், அதேபோன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க முடியாமல்
ஹோட்டல் உரிமையாளர்களும் திண்டாடி வரும் சூழலில் இதுபோன்று கேஸ் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதிக லாபம் பார்க்கும் கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் மீதும்.
கேஸ் ஏஜென்சிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிஷன்கள் வலைதளங்களில் கருத்துக்களை பரிமாறு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved