news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசியல் கேள்விகளுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ கூறிய ரஜினிகாந்த்
tv

Also Watch

tv

Read this

அரசியல் கேள்விகளுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ கூறிய ரஜினிகாந்த்

சென்னை, விமான நிலையம்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெயிலர்-2 திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தகவல் தெரிவித்து உள்ளார். சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ என பதில் அளித்து உள்ளார்.

விமான நிலையத்தில் ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு, ஜெயிலர்-2 திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த், "ஆல்மோஸ்ட் படம் முடிஞ்சிருச்சி. பினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. படம் எப்போ ரிலீஸ்ன்னு புரோடொக்சன் சீக்கிரம் சொல்லுவாங்க," என்று கூறினார்.

தேர்தல் குறித்த கேள்வி
தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது, மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு இரண்டு கைகளையும் குவித்து, "வணக்கம், தாங்க்யூ" என்று சிரித்துக் கொண்டே கூறினார். தொடர்ந்து, "நீங்களும், கமலும் நடிக்கும் படம் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?' என்ற கேள்விக்கு, "ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார்.

வில்லிவாக்கும் தொகுதிக்கு...
தொடர்ந்து ரஜினியிடம், "வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "நோ கமெண்ட்ஸ், நோ கமெண்ட்ஸ்" எனக் கூறிக்கொண்டே ரஜினிகாந்த் சென்றார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

Related Link
ரஜினியை கோபப்படுத்திய ஆதவ் அர்ஜுனா

ரஜினியை கோபப்படுத்திய ஆதவ் அர்ஜுனா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமா

6
8 mins agoshare
தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved