உணவு பாதுகாப்புத் துறையினர் : ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் தினந்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் மற்றும் யாத்திரைகள் உணவகங்களில் சாப்பிடும்போது பலவித உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து இன்று அதிரடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் நகரப் பகுதிகளில் உள்ள உணவுகளில் சோதனையில் ஈடுபட்டனர் இதில் கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்து ப்ளீச்சிங் பவுடர் மூலம் அதனை அழித்ததோடு. இதுபோன்று கெட்டுப்போன உணவுகளை உணவகங்களில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றுள்ளனர். Related Link அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி