ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விளாங்கோம்பை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் விளாங்கோம்பை, கம்பனூர் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்கு செல்ல கடும் சிரமமடைவதாக வேதனையுடன் கூறுகின்றனர். காட்டாற்றை கடக்கும்போது இரு சக்கர வாகனங்களையும், அத்தியாவசிய பொருட்களையும் ஆபத்தான முறையில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவலூர் வனச்சாலையை விரிவுபடுத்தி தர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இதையும் படியுங்கள் : கூடலூர் அருகே துணை மின்நிலையம் வெள்ளத்தால் சேதம்