மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவகோட்டை கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று அம்மா அரசின் சாதனை விளக்கத் துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பொதுமக்களிடம் நேரில் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையான நடுவகோட்டை கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊரணி சுற்றுச்சுவரினை சட்டமன்றத் தேர்தல் ஆர்பி உதயகுமார் திறந்து வைத்தார். RB உதயகுமார் அளித்த பேட்டி : கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆளுநர் உரை சர்ச்சையாக மல்லுக்கட்டாக ஜல்லிக்கட்டு ஆக தான் இருந்தது, ஆகவே இந்த ஆண்டாவது முறையாக மேதகு ஆளுநர் உரை மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டப்பேரவையில் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது பொங்கல் நாள் செய்தியாக 5 முத்து முத்தான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை 2000 , நகர பேருந்தில் மகளிர்க்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் என்ற அறிவிப்பும். வீடற்றவர்களுக்கு அம்மா இல்ல திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என்று அறிவிப்பும் , 5 லட்சம் மகளிர்க்கு ரூபாய் 25 ஆயிரம் மகளிர் திட்டமும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் போன்ற முத்து முத்து ஆன ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் வெளியிட்ட பிறகு தமிழ்நாடு எங்கும் மிகப்பெரிய வரவேற்பு .மக்களிடத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுகிற திமுக ஸ்டாலின் அரசின் அமைச்சர்கள் 23ஆம் புலிகேசி போல நடுநடுங்கி போயிருக்கிறார்கள் ஆகவே தேர்தல் போர்க்களத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் வெற்றி வாகை சூடும் வகையில் களம் கண்டு மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் திமுகவே குலை நடுங்கிப் போகிற வகையில் மக்களுக்கான மகத்தான திட்டங்களை வழங்கி வருகிறார். அம்மா தொடங்கி வைத்த பொங்கல் பரிசு தொகுப்பை புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் 2500 ஆக உயர்த்தி கொடுத்தார்கள் அப்போது 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆண்டுக்கு நூறு ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் 3000 ரூபாய் வழங்கியுள்ளார். அதிமுகவை பார்த்து தான் பிரிண்ட் அவுட் எடுத்து காப்பி அடிக்கிற அந்த நிலையிலே திமுக இருக்கிறது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் தேர்தல் அறிக்கையில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் முதற்கட்டமாக கொடுத்தது திமுகவின் கூடாரம் நடுங்கிப் போய் உள்ளதை 23ஆம் புலிகேசி அமைச்சர்கள் உலறுவதில் இருந்து நமக்கு கண்கூடாக தெரிகிறது.பெயரில் காந்தியை வைத்துக்கொண்டு கோட்சே போல் செயல்படுகிற அமைச்சர் விலையில்லா வேஷ்டி சேலை திட்டத்தை ஒட்டுமொத்த முறைகேடு திட்டமாக மாற்றி இருக்கிறார்கள். எந்த மேடையிலும் விவாதிக்கலாம் 4 ஆண்டுகளில் ஒரு கோடி 77 லட்சம் பேருக்கு முறையாக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படவில்லை இதுதான் உண்மையான கள நிலவரம் இந்த அரசு எத்தனை காலம் பொய் சொல்லி ஏமாற்ற முடியும் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. மக்களுக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை உலகத் தமிழர்கள் பார்த்தார்கள் இந்த ஆட்சியில் மக்களுக்கான ஜல்லிக்கட்டு அல்ல மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கருணாநிதி குடும்பத்திற்காக நடத்துகிற ஜல்லிக்கட்டு ஆகத்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுடன் End Card தமிழ்நாடு மக்கள் போட்டு விடுவார்கள் Beginning Card எடப்பாடி தலைமையில் பரிசுத்தமில்ல எடப்பாடியார் உள்ளூர் கிராம கமிட்டி வழிகாட்டுதலின் பேரில் அரசு உறுதுணையாக இருந்து மக்களுக்கான ஜல்லிக்கட்டு மகத்தான ஜல்லிக்கட்டாக நடைபெறும். காளை வளர்ப்போருக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று அறிவித்தார்கள் ஐந்து வருடம் ஆகிவிட்டது வரவில்லை அறிவிக்க வேண்டியது தான் 525 வாக்குறுதியை நிறைவேற்றவில்லை அவர் சொல்லுவார் சொன்னதோட தண்ணீரில் எழுத வேண்டியது தான் என்று பேட்டியளித்தார்.இதையும் படியுங்கள் : முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற கார் வழிமறிப்பு