திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாத சாயக்கழிவுகள் வெளியேற்றப்படும் நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயக்கழிவுகள் காரணமாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.