கன மழை காரணமாக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். விளைநிலங்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்ததாகவும், ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.