செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் விதிமுறைகளை மீறி மண் அள்ளி லாரி லாரியாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்போரூர் பெரிய இரும்பேடு ஏரி மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், 6 வழிச்சாலை அமைப்பதற்காக ஏரியில் இருந்து மண் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் குறிப்பிட்ட அளவை தாண்டி பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி எடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மண் அள்ளிக்கொண்டு லாரிகள் ஓய்வின்றி செல்வதால் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர்.