திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் எம்.எல்.எம். முறை மூலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த தனியார் நிறுவனம், கமிசன் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், பெண் மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.டிரான்ஸ் இந்தியா என்ற நிறுவனம், கமிசன் தராமல் ஏமாற்றியதால், ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.