திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சாந்தி அகர்பத்தி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 48 லட்சம் ரூபாய் பணம், 83 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.அகர்பத்தி நிறுவன உரிமையாளர் அருணாச்சலம், லாட்டரி விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.