மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.